செய்திகள்
சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி

வாக்கு எண்ணிக்கையில் தமிழகம் முழுவதும் முறைகேடு- ராமசாமி குற்றச்சாட்டு

Published On 2020-01-03 10:06 GMT   |   Update On 2020-01-03 10:06 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் தமிழகம் முழுவதும் முறைகேடு நடந்துள்ளதாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காரைக்குடி:

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிப்பதில் ஆளுங்கட்சியின் நெருக்கடி அதிகமாக இருந்தது. உதாரணமாக சங்கராபுரம் பஞ்சாயத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி என்று அறிவித்து சான்றிதழ் வழங்கிவிட்டு நெருக்கடி காரணமாக மற்றொரு வேட்பாளருக்கும் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

ஒரு தேர்தல் அதிகாரிக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. பெற்ற வெற்றியை ரத்து செய்ய அதிகாரம் இல்லை.

தேர்தல் பார்வையாளரிடம் இதுகுறித்து நான் கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. இதுதான் ஜனநாயகமா?

ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. வரும் காலங்களில் பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். சாதாரணமானவர்களால் போட்டியிட முடியாது.

குதிரை பேரம் நடைபெறும் என்பதற்காகவே யூனியன் சேர்மன் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்த வலியுறுத்தினோம். இப்போது ஆளுங்கட்சியினர் பல்வேறு இடங்களில் வெற்றிபெற்ற மாற்று கட்சியினரை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரசாரிடம் அவர்கள் முயற்சி பலிக்காது.

சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் முடிவு சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எங்கள் கூட்டணியின் தலைவர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News