செய்திகள்
கோப்பு படம்

நண்டு ஏற்றுமதி முதலீடு: இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி

Published On 2019-12-28 19:32 IST   |   Update On 2019-12-28 19:32:00 IST
நண்டு ஏற்றுமதியில் முதலீடுகள் வாங்கி கொடுத்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்,
வேலூர்:

குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த பிரதீப் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் பி.இ. படித்து விட்டு வேலை தேடி வருகிறேன். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் தனியார் கம்பெனியின் பங்குதாரர்கள் என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை தருவதாகவும் என்னிடம் கூறினர்.

மேலும் அதே கம்பெனியை சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர். அதன் பிறகு சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார்கள்.

அவர்கள் பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வருவதாகவும் ரூ. ஒரு லட்சம் செலுத்தினால் 9 மாதத்தில் 2 லட்சமாக தருகிறோம் என்று தெரிவித்தனர்.

அதன்பிறகு வேலூரில் இதேபோல் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். அதில் அவர்கள் கலந்துகொண்டு என்னையும் என்னோடு அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் முதலீடு செய்யுமாறு தூண்டினார்கள்.

அதிக முதலீடுகள் வாங்கி கொடுத்தால் கார் இலவசமாக தருகிறோம். வெளிநாடு அழைத்து செல்கிறோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை கூறினர்.

இதனை நம்பி ரூ. 70 லட்சம் வரை முதலீடு செய்தோம். அதன்பிறகு கடந்த 3 மாதங்களாக அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை கேட்ட போது தராமல் இழுத்தடித்தனர். தற்போது அவர்கள் தமிழகம் முழுவதும் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்துபணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Similar News