செய்திகள்
வேலூர் சேண்பாக்கத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
வேலூர் சேண்பாக்கத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (43). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.