செய்திகள்
வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் 904 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு

Published On 2019-12-27 10:28 GMT   |   Update On 2019-12-27 10:28 GMT
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட கிராம பகுதிகளில் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதற்கட்டமாக சிவகங்கை, காளையார் கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

225 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 84 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 8 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

5 ஒன்றியங்களில் 904 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கிராம பகுதிகளில் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது. 5 ஒன்றியங்களில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 654 பேர் வாக்களிக்க உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி 904 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பதட்டமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டார்.

Tags:    

Similar News