செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

ஒரகடம் அருகே ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2019-12-10 06:30 GMT   |   Update On 2019-12-10 06:30 GMT
ஒரகடம் அருகே ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:

ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் முகேசன். இவரது மகன் மணிமாறன் (15).

இவர் வடக்கு பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மணிமாறன் வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றார். வகுப்பு ஆசிரியர் அவரிடம் ரெகார்ட் நோட்டு கேட்டு உள்ளார். வீட்டில் மறந்து வைத்து விட்டேன் என கூறி உள்ளார்.

உடனே ஆசிரியர் வீட்டுக்கு சென்று நோட்டு எடுத்து வா என்று திட்டி அனுப்பிவைத்தார்.

வீட்டில் இருந்த ரெக்கார்டு நோட்டில் பாடம் எழுதவில்லை. எனவே தன்னை ஆசிரியர் மேலும் கண்டித்து விடுவார் என்ற பயத்தில் மணிமாறன் வீட்டின் மின் விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே பள்ளியில் சமையல் வேலை செய்யும் மணிமாறனின் பாட்டி ராஜம்மாள் நீண்ட நேரமாகியும் மணிமாறன் வராததால் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது மணிமாறன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொது மக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரகடம் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மாணவன் தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கிறார்.

மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News