செய்திகள்
கோப்பு படம்

இணைப்பு நடவடிக்கை: வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-22 13:45 GMT   |   Update On 2019-10-22 13:45 GMT
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் வங்கித்துறை சீர்திருத்தங்களை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெருந்துறை:

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் வங்கித்துறை சீர்திருத்தங்களை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஈரோட்டில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் கணேசன் தலைமையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து பொதுத்துறை வங்கிகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான அளவில் முதலீடுகள் வழங்கப்பட வேண்டும் கிராமப்புற கிளைகள் அதிக அளவில் துவக்கப்பட வேண்டும்.

வங்கிகள் இணைப்பு என்னும் பெயரில் வங்கி மூடப்படுவதை கண்டித்தும் வங்கிகள் இணைப்புத் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத வர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கித் துறையை சீர்குலைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் வங்கிகள் போராட்டத்தில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News