செய்திகள்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.

திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது

Published On 2019-10-17 06:33 GMT   |   Update On 2019-10-17 06:33 GMT
திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூந்தமல்லி:

திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் கிராமம் உள்ளது.

நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக இந்த பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அயனம்பாக்கம் அம்பேத்கர் சாலையை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள மழை நீர் கால்வாய் பராமரிப்பு பணி முடியாததால், மழை நீர் கால்வாயில் இருந்து வெளியேறி ஊருக்குள் பாய்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது தெரிய வந்தது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வானகரம்- அம்பத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரோட்டின் குறுக்கே மரக்கட்டைகளை அடுக்கி வைத்தனர். இதன் காரணமாக இன்று காலை 6 மணி முதல் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி, மற்றும் நகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மழை நீர் கால்வாய் வேகமாக சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். என்றாலும் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையின் போது கிராம மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணிவரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News