செய்திகள்
கோப்பு படம்

சத்தி வனப்பகுதி ஆசனூர் அருகே நடுரோட்டில் மின் கம்பம் முறிந்து விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-09-30 17:36 IST   |   Update On 2019-09-30 17:36:00 IST
ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதி ஆசனூர் அருகே மின் கம்பம் முறிந்து நடுரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ளது இரும்பு பள்ளம். இன்று காலை இந்த பகுதியில் லேசான காற்றுடன் மிதமான மழை பெய்தது.

அப்போது எதிர்பாராத வகையில் திடீரென ரோட்டோரம் உள்ள ஒரு மின் கம்பம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் அங்கு நடந்து செல்ல வில்லை. வாகனங்களும் ரோட்டில் செல்லவில்லை.

மின் கம்பம் முறிந்து நடு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்களள் போக முடியாமல் அணி வகுத்து நின்றன.

மேலும் இந்த பகுதிகளுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகரில் இருந்து மின்சாரம் செல்கிறது. மின் கம்பம் மறிந்து விழுந்ததையொட்டி ஆசனூர், அரேப்பாளையம், கேர்மாளம், மாவல்லம் உள்பட 40 கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் வனப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு மின் வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த மின் கம்பத்தை ஊழியர்கள் தூக்கி ஓரமாக போட்டனர்.

அதன் பிறகு 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Similar News