செய்திகள்
கோப்பு படம்

ஈரோடு மாவட்ட பகுதியை சேர்ந்தவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.7 கோடி மோசடி செய்த நிறுவனம்

Published On 2019-09-30 11:52 GMT   |   Update On 2019-09-30 11:52 GMT
ஈரோடு மாவட்ட பகுதியை சேர்ந்தவர்களிடம் ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவனம் ரூ.7 கோடி மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

மதுரையை தலைமை இடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மாத தவணையாக ரொக்க பணம் பெற்று அந்த பணத்துக்கு நிலத்தை முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தில் பொதுமக்களிடம் திரும்ப பணமாகவோ, நிலமாகவோ அதிக லாபத்துடன் கொடுப்போம் என்று ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி பலர் பணத்தை முதலீடு செய்தனர்.

தமிழகம் முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடி வசூலானது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.7 கோடி வசூலானது. ஆனால் காலம் முடிந்ததும் அதற்குரிய பணமோ... நிலமோ கொடுக்கவில்லை எனவும் அந்த நிறுவனம் வசூல் செய்த பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சின்ன புலியூரை சேர்ந்த 50 பேர் இதில் ஏமாந்துள்ளனர். அவர்கள் இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறை கேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News