செய்திகள்
தீக்குளிக்க முயற்சி

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-09-30 16:19 IST   |   Update On 2019-09-30 16:22:00 IST
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் குருமாத்தூர் ரோடு காளியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி அம்புரோஜ் பேகம் (வயது 50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சைய்யது முஸ்தபா (27) பி.ஈ. ஏரோ நாட்டிக்கல் படித்துள்ளார். அலாவுதீன் (22). தையல் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வந்தது. கலெக்டர் கதிரவன் மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.

அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த அம்புரோஜ் பேகம் தன் கையில் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் தலையில் ஊற்றி பற்ற வைக்க முயற்சித்தார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாய்ந்து சென்று மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு சூரம்பட்டி போலீசார் அம்புரோஜ் பேகத்தை பிடித்து விசாரணை செய்த போது தன் மகனுக்கு வரும் வேலைகளை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து விடுவதாக கூறினார்.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News