செய்திகள்
கோப்பு படம்

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை சேதம் - 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2019-09-19 10:24 GMT   |   Update On 2019-09-19 10:24 GMT
வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை சேதமடைந்த சம்பவம் குறித்து 11 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே இருந்த அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 43), பாண்டியராஜன்(32), லெனின்(35), பாபுராஜ்(40), சரத்குமார்(27), தமிழ்ச்செல்வன்(26), அரவிந்த்ராஜ்(23), மணிகண்டன்(33), விஜயராகவன்(27), கணேஷ்குமார் (24), சாமிநாதன்(43) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையிலும், திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்து வருவதால் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் சுரேஷ்குமார், சிறையில் உள்ள 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவின் நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
Tags:    

Similar News