செய்திகள்
கோப்பு படம்

மேல்பட்டியில் 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள சரக்கு ரெயிலை அப்புறப்படுத்த கோரி மறியல்

Published On 2019-09-12 17:09 IST   |   Update On 2019-09-12 17:09:00 IST
என்ஜின் பழுது காரணமாக மேல்பட்டியில் 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள சரக்கு ரெயிலை அப்புறப்படுத்த கோரி ரெயில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி ரெயில் நிலையம் உள்ளது.

இங்கு சாந்திநகர் குளிதிகை வடபுதுப்பட்டி உட்படபத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வியாபாரிகள் அலுவலகம் செல்வோர் மேல்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு சென்று வந்தனர் இந்நிலையில் என்ஜின் பழுது காரணமாக மேல்பட்டி ரெயில் நிலையத்தில் கனிந்த பார் கடந்த 15 நாட்களாக சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னையிலிருந்து மேல்பட்டி ரேயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ரெயில் நிற்க வேண்டிய இடத்தில் சரக்கு ரெயில் நிற்பதால் மாற்றுப்பாதையில் ரெயில் நிறுத்தப்படுகிறது.

இதனால் இரவில் ரெயிலில் வரும் பயணிகள் முதியவர்கள் ரெயிலில் இருந்து கீழே இறங்க மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரெயில் பயணிகள் இன்று காலை மேல்பட்டி ரேயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோலார் பேட்டையிலிருந்து அரக்கோணம் தெற்கு சென்ற பயணிகள் மின்சார ரெயிலை மறித்தனர்.

இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி ரெயில் நிலைய அலுவலர் கலைவாணன் மங்களூர் ரெயில் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் சென்னை சென்னையிலிருந்து இன்று மாலைக்குள் மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு கூட்ஸ் ரெயில் அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மேல்பட்டி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News