செய்திகள்
தற்கொலை

நாகூரில் தஞ்சை வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-09-12 14:20 IST   |   Update On 2019-09-12 14:20:00 IST
நாகூரில் தஞ்சை வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

தஞ்சாவூர் ரங்கநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலையா மகன் மலர்மன்னன் (வயது 21). இவர் கடந்த 10-ந் தேதி நாகை அடுத்த வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

அருகில் சுற்றுலா தலமான நாகூருக்கு சென்றனர். அப்போது மது அருந்துவதற்கு மலர்மன்னன் அவருடைய அண்ணன் ரங்கராஜனிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் மறுத்துள்ளார்.

இதில் மனமுடைந்த மலர்மன்னன் அருகில் இருந்த கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி குடித்து உள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News