செய்திகள்
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டம்
தொழிலாளர்கள் தாக்கியதில் டாக்டர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
அசாம் மாநிலத்தில் மதிய உணவுக்கு சென்ற டாக்டர் வருவதற்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக தொழிலாளர்கள் டாக்டர் தீபன்தத்தா என்பவரை தாக்கியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில் டாக்டர் யோகானந்தன், சங்க தலைவர் பி.டி. சரவணன், டாக்டர்கள் விக்டோரியா, பூபதி தன்யகுமார் கலந்து கொண்டனர்.