செய்திகள்
புதுப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதி கொத்தனார் பலி
புதுப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது 45). கொத்தனார். இவர் கிளாப்பாக்கத்தில் உள்ள தந்தையை பார்த்து விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதுப்பட்டினம் சாலை, தாங்கல் நகர் வளைவில் வந்த போது எதிரே வந்த மணல் ஏற்றிய லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எம்.ஜி.ஆர். உடல் நசுங்கி இறந்தார்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.