செய்திகள்
விநாயகர் சிலைகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Published On 2019-08-30 10:15 GMT   |   Update On 2019-08-30 10:15 GMT
ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 2-ந் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதே போல் ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து முன்னணி சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, பு.புளியம்பட்டி, கவுந்தப்பாடி உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு ஈரோடு சம்பத் நகர் பிரிவில் கணபதி ஹோமத்துடன் வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி தினமும் பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

5-ந் தேதி மாலை 3 மணிக்கு ஈரோடு மாநகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளின் ஆன்மிக ஊர்வலம் சம்பத் நகர் பிரிவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று காவிரி ஆற்றை சென்றடையும். ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் பூசப்பன், மாநில செயலாளர் கிஷோர்குமார் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மாநில பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட தலைவர் ஜெகதீசன், பொதுச் செயலாளர் சக்தி முருகேஷ், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

அற விழிப்புணர்வு இயக்க தென் பாரத அமைப்பாளர் சண்முகநாதன் சிறப்புரையாற்றுகிறார். ஊர்வலத்தை வாசுகி சின்னுசாமி, டாக்டர் ரகுநாத் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

Tags:    

Similar News