செய்திகள்
கைது

விநாயகர் சதூர்த்தி விழா ஏற்பாடுகள் முன் எச்சரிக்கையாக 152 பேர் கைது

Published On 2019-08-29 10:36 GMT   |   Update On 2019-08-29 10:36 GMT
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 152 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்து அமைப்புகள் சார்பில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடத்திட மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக போலீசார் இரவு பகல் என்று பாராமல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக பழைய குற்றவாளிகள் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தியின் போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் மொத்தம் 5 ஆயிரத்து 492 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. 2,674 பேர் மீது வழக்கு செய்யபட்டுள்ளது.

152 பழைய குற்றவாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று அமைதியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News