செய்திகள்
போலீசார் பாதுகாப்பு

காஷ்மீர் விவகாரம் - கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து

Published On 2019-08-06 07:13 GMT   |   Update On 2019-08-06 07:13 GMT
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்கவும் அந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் எந்தவித அசாம்பவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.

இந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின் பேரில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags:    

Similar News