செய்திகள்
வேலூர் தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ள வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ள வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 3-ந் தேதி காலை 10 மணி முதல் 5-ந் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஆகஸ்டு 9-ந் தேதியும் மதுபானக் கடைகள் மூடப்படும். மேலும் மதுபானக் கடைகளையொட்டி அமைந்துள்ள பார்களும் மூடப்படுகிறது. மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 4 நாட்களும் மது விற்பனை செய்வது மற்றும் மதுபானங்கள் பரிமாற்றம் செய்வது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.