செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது: நான் அழுதேனா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

Published On 2019-07-27 15:57 IST   |   Update On 2019-07-27 16:03:00 IST
பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா? என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மொழியைப் போன்ற தொன்மையான மொழி எதுவும் கிடையாது. 12-ம்  வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எலக்ட்ரானிக், பேட்டரி கார்களுக்கு 5% வரியை குறைக்க கோரிக்கை  வைத்தோம். மேலும் 61 பொருட்களுக்கு வரி குறைப்பு, வரி விலக்கிற்கான கோரிக்கை வைத்துள்ளோம்.

பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா?, பொறுப்பில் இல்லை என்றவுடன் கட்சியையும் கட்சியில் இருப்பவர்களையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Similar News