செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்கள்.

திருப்பத்தூரில் குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டார்கள் பறிமுதல்

Published On 2019-07-19 13:03 GMT   |   Update On 2019-07-19 13:03 GMT
திருப்பத்தூரில் குடிநீர் உறிஞ்சிய 6 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகளை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகராட்சியில் சார்பில் திருப்பத்தூரில் உள்ள 36 வார்டுகளில் மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தர்மராஜா கோவில் தெருவில் புதிய குடிநீர்இணைப்பு வழங்கும் இடங்களை திருப்பத்தூர் நகராட்சி கமி‌ஷனர் சந்திரா, பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் பீட்டர் செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதியில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சிக்கொண்டிருந்த 6 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பை துண்டித்தனர் .

அதன் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் வந்து இனி இது போல செய்ய மாட்டோம் என எழுதிக் கொடுத்த பிறகு தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி கமி‌ஷனர் சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

வறட்சி காரணமாககுடிநீர் வருவது குறைந்து திருப்பத்தூர் பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும் நாளை முதல் அனைத்து பகுதிகளிலும் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகிறார்களா என கண்காணிக்க குழு வார்டு வார்டாக செல்ல உள்ளார்கள் குடிநீர் உறிஞ்சினால் அவர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் மீண்டும் அதேமாதிரி செய்தால் குடிநீர் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்படும்.

மேலும் ஒரு வருடம் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்தால் அதை நகராட்சி எடுத்துச் செல்லாது அந்த கழிவுகளை அந்த நிறுவனத்தின் நிதி மேலாண்மை செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்யும் ஹோட்டல்கள் வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்கள் உரிமையாளர்களுக்கு அந்த கழிவுகளை எவ்வாறு வேளாண்மை செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News