செய்திகள்
பணம் பறிமுதல்

வாணியம்பாடியில் தேங்காய் வியாபாரியிடம் ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Published On 2019-07-18 11:08 GMT   |   Update On 2019-07-18 11:08 GMT
வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாணியம்பாடியில் தேங்காய் வியாபாரியிடம் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி:

வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை கூட்டு ரோட்டில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வாணியம்பாடி வெள்ளக்குட்டையை சேர்ந்த தவமணி என்பவரிடம் இருந்து ரூ.2.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தவமணி தேங்காய் வாங்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் பணத்திற்கு உண்டான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்த பணத்தை வாணியம்பாடி தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News