செய்திகள்
பிரதமர் மோடி

அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23-ந்தேதி காஞ்சீபுரம் வருகை

Published On 2019-07-08 05:53 IST   |   Update On 2019-07-08 05:53:00 IST
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சீபுரம் வருகிறார்.
காஞ்சீபுரம்:

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சீபுரம் வருகிறார். அன்று அத்திவரதரை தரிசனம் செய்யும் அவர், காஞ்சீபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்கிறார்.

மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரிகளும், தமிழக அமைச்சர்களும் வருகை தர உள்ளனர்.



மோடி வருகையையொட்டி காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் இங்கு வரும் மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரம் கோவிலுக்கு செல்கிறார். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Similar News