செய்திகள்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகே ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
அத்திவரதர் வைபவம் நடைபெறும் நிலையில், காஞ்சீபுரத்தில் ஆட்டோ ஓட்ட அனுமதி மறுத்ததாக கூறி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஏராளமான பக்தர்கள் வருவதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்திவரதர் வைபவம் நடைபெறும் நிலையில், நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீடீரென தீக்குளித்தார்.
இதில் படுகாயம் அடைந்த குமாரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.