செய்திகள்

கிண்டியில் பள்ளி மாணவன் தற்கொலை

Published On 2019-06-27 15:31 IST   |   Update On 2019-06-27 15:31:00 IST
கிண்டியில் 9-வது வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:

கிண்டி மடுவின்கரை தாத்தானியா பேட்டையை சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன் விஷால் (13).

புழுதிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விஷால் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 7 மணி அளவில் தனது வீட்டில் படிக்கட்டின் கீழ் உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.

விஷாலின் அம்மா சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். காபி போட்டு மகனுக்கு கொண்டு வந்தார்.

அப்போது மாணவன் விஷால் படிக்கட்டின் கீழ் நிற்பதுபோல் தெரிந்தது. அருகில் வந்து பார்த்தபோது அவர் படிக்கட்டில் உள்ள கம்பியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனே கதறி துடித்தார். வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் விஷாலை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதல் உதவிக்கு பிறகு ராயபேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால், மாணவன் விஷால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றி கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் உடலை கண்டு தாய்-தந்தை, உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Similar News