செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Published On 2019-06-13 15:48 GMT   |   Update On 2019-06-13 17:39 GMT
ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டஞ்கச்சேரியில் திருவரங்குளம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியசெயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். பால சுப்பிர மணியன் வரவேற்றுப் பேசினார். 

கூட்டத்தில் ஆலங்குடிக்கு தனிசெயல் அலுவலர் நியமிக்க வேண்டும், தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சிறு மின் விசை நீர்த் தேக்கத் தொட்டிகள் செயல் பட வில்லை. அவற்றைச் சரி செய்து முறையாகக் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். 
நெடுவாசலில் போடப்பட்டுள்ள ஆழ்துணைக்கிணறுகளை அகற்ற வேண்டும். நீட் தேர்வைக் கைவிட வேண்டும். காவிரி டெல்டாவைப் பாலை வனமாக்க முயற்சிக்கும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் என்ற எந்தத்திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது. அப்படிக் கொண்டு வர நினைத்தால் அதைத் தடுக்க கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது என்றும், 12-ம் தேதி கிழக்குக் கடற் கரைச் சாலையில் மக்கள் விரோதத் திட்டங்களைக் கண்டித்து மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

முடிவில் தமிழரசன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News