செய்திகள்

கறம்பக்குடியில் இளம்பெண் மாயம்

Published On 2019-06-08 22:00 IST   |   Update On 2019-06-08 22:00:00 IST
கறம்பக்குடியில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெரியபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மனைவி ஹபீசா. இவர்களது மகள் நஜ்மா (வயது 19). இவருக்குதிருமணமாகி விட்டது. கணவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நஜ்மா தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். 

இந்நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News