செய்திகள்

ஈரோட்டில் ரெயில் மோதி என்ஜினீயர் பலி

Published On 2019-06-01 20:53 IST   |   Update On 2019-06-01 20:53:00 IST
ஈரோடு ரங்கம்பாளையம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

ஈரோடு:

ஈரோடு ரங்கம்பாளையம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்த வாலிபர் ஈரோடு சூளை நத்தக்காடு பூசாரித்தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் பிரதீப்குமார்(25) என்பதும், என்ஜினீயரிங் படித்து முடித்து ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மீண்டும் வேலைக்காக செல்லும் ரங்கம்பாளையம் தண்டவாளத்தை செல்போனில் ஹெட்போன் அணிந்து பாட்டு கொண்டே கவனக்குறைவாக கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருக்கலாம் என தெரியவந்தது.

இதனையடுத்து பிரதீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News