செய்திகள்

பண்ருட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2019-05-05 18:26 GMT   |   Update On 2019-05-05 18:26 GMT
பண்ருட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 40). டாஸ்மாக் ஊழியரான இவர் கடந்த 15-3-2019 அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு பண்ருட்டி ராசாப்பாளையம் கூட்ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பாஸ்கரனை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த 430 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பெருமுக்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் பாலா(வயது 27), செஞ்சி ஜெயம்கொண்டான் கிராமம், மேட்டுதெருவை சேர்ந்த பாலமுருகன்(26) ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்த னர். இவர்கள் மீது பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, செஞ்சி, திண்டிவனம் மற்றும் பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதேபோல் பண்ருட்டி ஆத்திரிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த வசந்திராணி(30) என்பவர் கடந்த 25-3-2019 அன்று சொரத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல் அருங்குணம் மேட்டு தெருவை சேர்ந்த சங்கர் என்கிற ஜெய்சங்கர்(35) என்பவர் வசந்திராணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த கவரிங் நகைகளை வழிப்பறி செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவுசெய்து ஜெய்சங்கரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம், திருப்பாதிரிப்புலியூர், முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய் தார். இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன், சிறையில் உள்ள பாலா, பாலமுருகன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.இதற்கான உத்தரவு நகல் சிறை காவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News