செய்திகள்

மணல் கடத்திய மாட்டு வண்டிகள், சரக்கு வேன் பறிமுதல் - 12 பேர் கைது

Published On 2019-05-04 23:10 IST   |   Update On 2019-05-04 23:10:00 IST
அரியலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த போலீசார் மாட்டி வண்டிகள், சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு சென்ற தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையிலான போலீசார் சோதனையிட்டு, மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள், சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த வேனாநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(வயது 47), சரவணன்(38), மகாராஜன்(39), மதனத்தூர் கருணாநிதி(40), கஜேந்திரன்(47), அறிவழகன்(33), ஜெயங்கொண்டம் மலங்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நடராஜன்(34), பொற்பதிந்த நல்லூர் ஜெய்சங்கர்(48), தாதம்பேட்டை காமராஜ்(59), தா.பழூர் வீரான்டன்(45), கோடங்குடி கணேசன்(62), மேலசிந்தாமணி மற்றொரு சரவணன்(27) ஆகிய 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News