செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு செய்த 3 பேர் கைது

Published On 2019-05-02 23:15 IST   |   Update On 2019-05-02 23:15:00 IST
விக்கிரமங்கலம் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கொலையனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசமூர்த்தி(வயது 24). செல்வம்(27), ஜெயராஜ்(25). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு மது குடித்துவிட்டு ஒருவரை ஒருவர் தகாதவார்த்தைகளால் திட்டி கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தனர் இதை அறிந்து அங்கு சென்ற விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Similar News