செய்திகள்

ஆசிரியர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு- நாளை மறுநாள் தொடக்கம்

Published On 2019-04-24 17:26 GMT   |   Update On 2019-04-24 17:26 GMT
ஆசிரியர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்குகிறது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் 2-ம் நிலை காவலர் தேர்வுகளுக்கான பியிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முற்பகல் முதல் தொடங்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது.

2-ம் நிலை காவலர் தேர்விற்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியின்போது இலவசமாக பயிற்சிக் குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் 2-ம் நிலை காவலர் தேர்வு ஆகிய 2 தேர்வுகளுக்கும் ஒவ்வொரு வார புதன்கிழமைகளில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். 

மேற்கண்ட தகவல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News