செய்திகள்

திருமங்கலம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2019-04-02 16:41 IST   |   Update On 2019-04-02 16:41:00 IST
திருமங்கலம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பேரையூர்:

திருமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முத்து ராஜா (வயது32). தோட்டம் அமைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சத்தியபாமா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட மனைவி தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை குடும்பம் நடத்த முத்துராஜா அழைத்தும் பலனில்லை.

இதனால் விரக்தியுடன் காணப்பட்ட முத்துராஜா நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News