செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் வங்கி ஊழியரிடம் ரூ. 1.22 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

Published On 2019-03-26 13:35 GMT   |   Update On 2019-03-26 13:35 GMT
ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 1.22 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம்- பழனி தேசிய நெடுஞ்சாலையில் அரசப்பபிள்ளைபட்டி பிரிவு அருகே தேர்தல் பறக்கும் படையினர் பறக்கும் படை அதிகாரி வசந்தா தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.22 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.

இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். காரில் வந்த கேரளாவை சேர்ந்த வங்கி ஊழியரான பிரசாத் ராமேசுவரம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவதற்கு கைச் செலவுக்காக பணம் எடுத்துச் சென்றதாக கூறினார். ஆனாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்று செல்லுமாறு அவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினார் பின்னர் அப்பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #tamilnews

Tags:    

Similar News