செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.40 லட்சம் காணிக்கை

Published On 2019-03-22 16:26 GMT   |   Update On 2019-03-22 16:26 GMT
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு ரூ. 40 லட்சம் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
மண்ணச்சநல்லூர்:

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இரு முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 2-வது முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், புதுக்கோட்டை உதவி ஆணையர் ரமேஷ், கோவில் மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. 

இதில் காணிக்கையாக ரூ.39 லட்சத்து 95 ஆயிரத்து 55 ரொக்கமும், 1 கிலோ 74 கிராம் தங்கமும், 4 கிலோ 36 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் (அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்) 119 கிடைத்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News