செய்திகள்

பிரசவத்தின்போது சிசுவின் தலை தனியாக வந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2019-03-21 11:20 GMT   |   Update On 2019-03-21 11:53 GMT
கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது சிசுவின் தலை தனியாக வந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #BabyBeheaded #TNHRC #Koovathoorbabydelivery
சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 19-ம் தேதி இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த செவிலியர், அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய அவர், சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்துள்ளார்.

குழந்தையின் தலை திரும்பியதும், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது. உடல் தாயின் கருப்பையில் சிக்கிக்கொண்டது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இவ்விவகாரம் தொடர்பாக  தாமே முன்வந்து விசாரணை நடத்த தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தீர்மானித்தது.

கூவத்தூரில் பிரசவத்தின்போது சிசுவின் தலை தனியாக வந்த விவகாரம் தொடர்பாக இன்னும் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய இயக்குனரகத்துக்கு  தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #BabyBeheaded #TNHRC #Koovathoorbabydelivery
Tags:    

Similar News