செய்திகள்

முல்லைபெரியாற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் திருடும் கும்பல்

Published On 2019-03-21 09:20 GMT   |   Update On 2019-03-21 09:20 GMT
முல்லைபெரியாற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் திருடும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:

முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுபோய் உள்ளது. கடந்த 16-ந்தேதி வரை 100 கனஅடிநீர் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் உத்தமபாளையம் பகுதிவரை கூட செல்லவில்லை. எனவே தண்ணீர் திறப்பை 170 கனஅடியாக உயர்த்தினர். இருந்தபோதும் முல்லை பெரியாற்றில் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டது.

அப்பகுதியில் உள்ள கும்பல் மின்மோட்டார் மூலம் தண்ணீரை திருடி வருவதால் வைகை அணைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் தண்ணீர் திருட பயன்படுத்திய மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

ஆனால் கம்பம், கூடலூர் பகுதியில் ஆய்வு செய்யவில்லை. இங்குதான் அதிகளவில் தண்ணீர் திருடப்படுகிறது.

எனவே அதிகாரிகள் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 113.45 அடி. வரத்து இல்லை. திறப்பு 170கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 44.43அடி,

வரத்து இல்லை, திறப்பு 60 கனஅடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 33.75, வரத்து இல்லை, திறப்பு 10. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 94.62 அடி, வரத்து இல்லை, திறப்பு 3 கனஅடி. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News