செய்திகள்

ஒரத்தநாடு அருகே லாரி மோதி கல்லூரி மாணவர்கள் படுகாயம்

Published On 2019-03-14 12:05 GMT   |   Update On 2019-03-14 12:05 GMT
ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஒரத்தநாடு:

நாகை மாவட்டம் பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பாலாஜி (வயது 18). இவர் ஒரத்தநாட்டில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று காலை பாலாஜியும், அவருடன் அதே கல்லூரியில் படிக்கம் காசவளநாட்டை சேர்ந்த கருணகரன் மகன் ஹரிஹரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் ஒரத்தநாட்டை அடுத்த ஈச்சன் கோட்டை பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் பாலாஜியும், ஹரிஹரனும் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அவர்களை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிசசை அளித்து வருகின்றனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரியை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News