செய்திகள்

ரெயில் நிலைய மேம்பாலத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-03-08 15:03 IST   |   Update On 2019-03-08 15:03:00 IST
வாணியம்பாடி ரெயில் நிலைய மேம்பாலத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த பெத்துறை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 65). அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிந்தராஜியிடம் இருந்து மளிகை கடையை மகன்கள் அபகரித்து கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கோவிந்தராஜிக்கு காலில் காயம் ஏற்பட்டதால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வாணியம்பாடி ரெயில் நிலையம் செல்லும் நடைபாதை மேம்பாலத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட பயணிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தராஜின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Similar News