செய்திகள்

கிண்டியில் திருமண தகராறில் பெண்ணை கொன்ற வாலிபர் கைது

Published On 2019-03-02 14:36 IST   |   Update On 2019-03-02 14:36:00 IST
கிண்டியில் நிச்சயித்த மகளை பார்க்க விடாததால் பெண்ணை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்:

சென்னை கிண்டி நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கணவரை இழந்த 2 மகள்களுடன் வசித்து வந்தார். இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வந்து இவரது மகள்களில் ஒருவருக்கும், கிண்டி மசூதி காலனியை சேர்ந்த வினோத் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நின்று போனது.

கடந்த ஓராண்டுக்கு முன்னரே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அதன் பின்னர் வினோத்தின் நடவடிக்கைகள் சரி இல்லை என்று கூறி தாய் ரேவதி தான் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதன்பின்னர் வினோத் பலமுறை கேட்டுப்பார்த்தும் ரேவதி திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே வினோத் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரேவதியை வெட்டிக் கொலை செய்தார்.

இதுபற்றி கிண்டி உதவி கமி‌ஷனர் சுப்பராயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ரேவதியை கொலை செய்த வினோத் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு-

ரேவதியின் மகளுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் நாங்கள் இருவரும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இதனால் ரேவதியின் மகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். திருமணத்தை நிறுத்திய பின்னர் நான் பலமுறை ரேவதியை சந்தித்து மகளுடன் சேர்த்து வைக்குமாறு கூறினேன்.

ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை நான் அடிக்கடி சந்தித்து பேசி வந்தேன்.

இதுபற்றி அறிந்ததும் ரேவதி மகளை விடுதியில் சேர்த்து விட்டார். இதனால் என்னால் அந்த பெண்ணை பார்க்க கூட முடியாமல் போய்விட்டது.

இதுபற்றி கடந்த வாரம் நேரில் சந்தித்து கேட்டேன். அப்போது ரேவதி, இனி, என் மகளை நீ பார்க்கவே கூடாது என்று வறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கொல்லாமல் விட மாட்டேன் என்று ரேவதியை எச்சரித்தேன். ஆனால் அவர் மனம் மாறவில்லை. இதனாலேயே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன். 

இவ்வாறு வினோத் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்கிறார்கள்.

Similar News