செய்திகள்

காலதாமதமாக வந்ததை கண்டித்து சென்னை ரெயிலை மறித்து பெண் பயணிகள் போராட்டம்

Published On 2019-02-19 10:01 GMT   |   Update On 2019-02-19 10:01 GMT
அரக்கோணத்தில் காலதாமதமாக வந்ததை கண்டித்து சென்னை ரெயிலை மறித்து பெண் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #ArakkonamRailwayStation
அரக்கோணம்:

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் பெண்களுக்கான சிறப்பு ரெயில் இயக்கபடுகிறது.

இதில் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்வோர் என 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சிறப்பு ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த பெண்கள் சிறப்பு ரெயில் கடந்த சில மாதங்களாக தினமும் 20 நிமிடம் காலதாமதமாக வருவதாகவும் இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 6.45-க்கு வர வேண்டிய இந்த சிறப்பு ரெயில் 7.25 மணிக்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டம் செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் நாட்களில் குறித்த நேரத்தில் ரெயிலை இயக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ArakkonamRailwayStation
Tags:    

Similar News