செய்திகள்

ஏழைகளின் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது - இன்பதுரை எம்எல்ஏ பேச்சு

Published On 2019-02-12 07:23 GMT   |   Update On 2019-02-12 08:20 GMT
ஏழைகளின் அரசாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது என்று இன்பதுரை எம்எல்ஏ கூறியுள்ளார். #EdappadiPalaniswami #ADMK

சென்னை:

தமிழக சட்டசபையில் ராதாபுரம் தொகுதி இன்பதுரை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 தருகின்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளைப் பற்றி இறங்கிப் பார்க்கின்ற அரசு. ஏழைகளுக்கு இறங்குகின்ற அரசு. அடுக்கடுக்காய் பல திட்டங்களை இந்த அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. .

தேசிய தனிநபர் வருமானம் 1,13,000 ஆகும். இந்திய தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டினுடைய தனிநபர் வருமானம் ரூ.30 ஆயிரம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிற்கு வழி காட்டும் விதமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

 


அரும்பு தோற்கிற சிரிப்பு, கரும்பு தோற்கிற இனிமை, எறும்பு தோற்கிற சுறுசுறுப்பு, இரும்பு தோற்கிற மன உறுதியைக் கொண்டவர் நம்முடைய முதல்- அமைச்சர். அவர் ஒரு உத்தரவைப் போட்டார். தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதற்கு தடை வந்தது.

புரட்சித் தலைவருக்கு ஒரு சத்துணவு திட்டம் எவ்வாறு பெயர் பெற்றுத் தந்ததோ, புரட்சித்தலைவிக்கு தொட்டில் குழந்தை திட்டம் எப்படி இருக்கின்றதோ, அதுபோல் நெகிழி இல்லாத தமிழகத்தை நம்முடைய முதல்-அமைச்சர் உருவாக்கியிருக்கிறார். எனவே அவருடைய பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும் என்பதை நான் இங்கு நெகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #ADMK

Tags:    

Similar News