செய்திகள்

அய்யம்பட்டியில் 10-ந் தேதி ஜல்லிக்கட்டு- 700 காளைகள் முன் பதிவு

Published On 2019-02-08 10:25 GMT   |   Update On 2019-02-08 10:25 GMT
அய்யம்பட்டியில் 10-ந்தேதி நடக்கும் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Jallikattu
உத்தமபாளையம்:

தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி மற்றும் பல்லவராயன் பட்டி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் போட்டியாக தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டியில் வருகிற 10-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இங்குள்ள ஏழை காத்தம்மன், வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

கடந்த 4-ந் தேதி காளைகளுக்கான முன் பதிவு தொடங்கியது. தேனி, திண்டுக்கல், மதுரை திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை (9-ந் தேதி) மாடு பிடி வீரர்களுக்கான முன் பதிவு தொடங்க உள்ளது. உரிய சான்றிதழ்களுடன் வந்து மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு கிராம கமிட்டியினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழி காட்டுதல்படி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், வாடிவாசல், பார்வையாளர் கேலரி, வி.ஐ.பி. மாடம், மாடு சேகரிக்கும் இடம், பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Jallikattu

Tags:    

Similar News