செய்திகள்

பிரம்மதேசம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்த 2 பேர் மரணம்

Published On 2019-02-08 15:36 IST   |   Update On 2019-02-08 15:36:00 IST
மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிட்லபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி செண்பகவள்ளி(வயது 47). இவர் கடந்த 1-ந் தேதி மாலையில் வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடிக்க தொடங்கியது. இதைஅறிந்ததும் செண்பக வள்ளி அலறிக் கொண்டு வெளியே ஓடிவந்தார். அப்போது சிலிண்டர் டமார் என்று வெடித்து வீடு தீ பிடிக்க தொடங்கியது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த கமலக்கண்ணன் என்பவரது வீட்டிலும் தீ பிடித்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்ததில் செண்பகவள்ளி கமலக் கண்ணன், ஜெயலட்சுமி உள்பட 8 பேர் தீக்காயம் அடைந்து உடல்கருகினர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமி, கமலக்கண்ணன் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.

இந்தசம்பவம் குறித்து பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News