செய்திகள்

திருமங்கலம் அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

Published On 2019-02-08 09:41 IST   |   Update On 2019-02-08 09:41:00 IST
திருமங்கலம் அருகே 9-ம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி திருமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பால்பாண்டி (62) என்பவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பால்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Tags:    

Similar News