செய்திகள்

தவறான நடத்தையை கைவிடாததால் கொன்றேன் - உதவி இயக்குனர் வாக்குமூலம்

Published On 2019-02-06 14:39 IST   |   Update On 2019-02-06 14:39:00 IST
தவறான நடத்தையை கைவிடாததால் தனது மனைவியை கொன்றதாக உதவி இயக்குனர் வாக்குமூலம் அளித்துள்ளார். #BodyPartsInDumbyard #WomanKilled
கைதான சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா ஆசை அதிகமாக இருந்தது. இதனால் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தேன். சந்தியாவை திருமணம் செய்த பிறகு 2 குழந்தைகள் பிறந்தன.

மகன், மகள் இருவரும் தூத்துக்குடியில் எனது பெற்றோரின் அரவணைப்பில் படித்து வருகிறார்கள்.

சென்னை வந்து ஜாபர்கான்பேட்டையில் நான் வசித்து வந்தேன். என்னுடன் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்ற சந்தியா சென்னையில் தங்கியிருந்து வெளியில் ஊர் சுற்றுவதாக கேள்விப்பட்டேன். இதற்காக அவளை அழைத்து கண்டித்தேன். சினிமா தொடர்பு காரணமாக சந்தியாவின் நடத்தை மாறியது. அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் பலமுறை எச்சரித்தேன். இருப்பினும் சந்தியா நான் சொல்வதை கேட்கவில்லை. இஷ்டப்படி வெளியில் செல்வது, எப்போதும் போனில் பேசுவது என இருந்தார்.

இதனை கண்டிக்கும் நேரங்களில் எல்லாம் என்னுடன் சண்டை போட்டார். விவாகரத்து செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இது தொடர்பாக எனக்கும் சந்தியாவுக்கும் பிரச்சினை வெடித்தது. இருவரும் வீட்டுக்குள்ளேயே கடுமையாக சண்டை போட்டோம். அப்போது சந்தியா என்னை வாய்க்கு வந்தபடி பேசினார்.

நான் சொல்கிறபடி ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நான் திரும்ப திரும்ப கூறினேன். ஆனால் சந்தியாவோ எனது விருப்பப்படிதான் வாழ்வேன் என்று கூறினார். இதன் காரணமாக எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

இதனால் சந்தியாவை கொலை செய்து அவள் உடலை 4 துண்டுகளாக துண்டித்தேன். ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக வெட்டி எடுத்து பார்சல் போட்டேன். இடுப்புக்கு கீழே முழங்கால் வரையில் தனியாக துண்டித்து இன்னொரு பார்சல் போட்டேன்.

கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பாகத்தையும், இடது கையையும் மற்றொரு பார்சலாக கட்டினேன். இரண்டு கால்களையும், வலது கையையும் தனியாக பார்சல் போட்டேன்.

19-ந்தேதி கொலை செய்து விட்டு ஒருநாள் முழுவதும் என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருந்தேன். அதன் பிறகு மறுநாளே கத்தியால் உடலை துண்டித்தேன்.

கொலையில் இருந்து தப்பிப்பதற்காக 20-ந்தேதி இரவில் உடல் பாகங்களை தனித்தனியாக வீசினேன்.

அனைத்தையும் வெளியில் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு சென்று 2 கால்கள், ஒரு கையை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசினேன். அதுதான் பெருங்குடியில் போலீசிடம் சிக்கி கொண்டது.

உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி வீசியதால் போலீசாரால் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். எப்போதும் போல எனது பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #BodyPartsInDumbyard #WomanKilled
Tags:    

Similar News