செய்திகள்

தூத்துக்குடியில் வாகனம் மோதி மீனவர் பலி

Published On 2019-02-03 21:10 IST   |   Update On 2019-02-03 21:10:00 IST
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது மகன் இசக்கிராஜா (வயது29), மீனவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

நேற்று இவர் மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News