செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

Published On 2019-02-03 14:06 GMT   |   Update On 2019-02-03 14:06 GMT
பென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அரசு பள்ளியில் சந்தனகொடிக் கால் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஆந்திராவில் உள்ள தனியார் கல் குவாரியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மோகன் (வயது 17) இவரது நண்பர்கள் நவீன், பிரவீண், நந்திவாணன். இவர்கள் 4 பேரும் ஏரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்தனர். 

நேற்று செய்முறை தேர்வு முடிந்ததும் பள்ளியில் இருந்து 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டிச் சென்றார். 

அஜ்ஜனஅள்ளி அடுத்த சுடுகாடு அருகே வளைவில் திரும்பும் போது 4 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மோகன் தலையில் பலத்த அடிப்பட்டது. அவருடன் சென்ற மற்ற 3 மாணவர்களும்  காயமடைந்தனர். 

இவர்கள் உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மோகன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். பிரவீண், நந்திவாணன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News