செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு

Published On 2019-02-03 13:42 GMT   |   Update On 2019-02-03 13:42 GMT
தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதமாக மழை இல்லாமல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் இந்தாண்டு பருவமழை காலங்களில் மழை பெய்யாததால் தருமபுரி மாவட்டம் முழுவதும் வறட்சியாக காணப்பட்டு வருகிறது. மழை பெய்யாமல் வறட்சியான காணப்படுவது காய்கறிகளை விவசாயம் செய்யும் விவசாயிகளை மட்டும் பாதிக்காமல் பூக்களை விவசாயம் செய்யும் விவசாயிகளையும் பாதித்துள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பூக்களின் விவசாயம் குறைந்துள்ளது. எனவே தர்மபுரி பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் வரக்கூடிய பூக்களின் வரத்தின் அளவு குறைந்துள்ளது. மேலும் இந்த மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகமாக இருப்பதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலை விவரம் வருமாறு:-

குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 500, காக்கடா பூ ஒரு கிலோ ரூ. 220, பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூ. 50, சம்பங்கி ஒரு கிலோ ரூ. 30, கனகாம்பரம் ஒரு கிலோ ரூ. 160, அலரி ஒரு கிலோ ரூ. 60, செண்டுமல்லி ஒரு கிலோ ரூ. 20 மற்றும் சாமந்தி ஒரு கிலோ ரூ. 80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News