செய்திகள்
அரக்கோணத்தில் ரெயிலில் ஆந்திராவுக்கு கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம்:
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தபடுவதாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று இரவு ஆந்திராவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிறு சிறு மூட்டைகளாக பதுக்கி வைக்கபட்டிருந்த சுமார் 300 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த ரேசன் அரிசி மூட்டைகளை வருவாய்துறையினரிடம் ஓப்டைத்தனர்.